Friday, May 17, 2013

சிவப்பு நாள் ! May 18

ரத்தத்தில் எழுதிய காவியங்கள்
சொற்பத்தில் முடிவதில்லை
சுதந்திரம் வேண்டும் தாகம்
சொற்கமும் தணிப்பதில்லை!

பிஞ்சு கதரல்கள்
நெஞ்சை பிளக்கையில்
அஞ்சி மௌனிப்பது
தமிழனுக்கில்லை

உறம் ஆன உடல் கண்டு
ரணம் கொண்ட மக்கள் எல்லாம்
வளம் காணும் நாள் இன்னும்
வெகு தூரம் இல்லை ..... புது ஈழம் பிறக்கும்!
                                    - ‍ குழலவன்.
Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

You might also like my other blog. Click here to get there.| எனது இன்னொரு வலைப்பதிவைக் காண இங்கே ஃகிளிக் செய்யவும்

Tuesday, April 9, 2013

An ode to a northern brother - by Sundar Balakrishnan

A draft hindi translation of the original sensible write up of my friend and fellow activist Mr. Sundar balakrishnan [https://www.facebook.com/bspillay].

एन.डी.टी.वी., टैमस नौ , सी.एन.एन. आई.बी.एन, ती हिंदू और अन्य मुख्या मीडियाएं  और वह दोस्तों जो  भी  समझथे  हैं कि श्रीलंका की  खिलाड़ियों पर प्रतिबंध लगाना बड़ा  बेवकूफी है : -

पड़ोसी देश में, छोटे शिशुओं / बच्चों सहित 176,000 मासूम नागरिक  जिन को हमारे साथ खून का रिश्ता है, मारे गए। आप मृत्युलेख लिख कर अपने कर्तव्य पूरा कर दिया। लेकिन, हम ने आँसू बहाया। 
श्रीलंका में हजारों महिलायें के साथ बलात्कार हुआ और उनके अंगों कटवा गया। तमिलनाडु में  और भी अधिक महिलायें के साथ बलात्कार हुआ और अधिक लड़कियों को एसिड हमले सामना कराना पड़ा। आप या तो इसे कोई महत्व नहीं दिया था (या) इसे नजरअंदाज कर दिया। लेकिन, हमारे दिल खून बेह्वाया।
तमिलनाडु से 400 भारतीय मछुआरों को श्रीलंका की नौसेना द्वारा मारे गए। आप ने बस यह कहा कि तमिलनाडु के मछुआरों  सीमाओं को पार कर दिया। पर हम ने उनकी  सुरक्षित वापसी के लिए हर रोज प्रार्थना की।
हम मिलके रक्षा बंधन, होली, दीवाली और पोंगल मनाते थे।
हम आप के साथ थे जब आप पाकिस्तान (खेल या अन्यथा) के लिए दरवाजे बंद कर दी,  वे दक्षिण के लिए किसी तरीके से भी खतरा न होने पर भी।

2001 में एक धूर देश पर 3,000 अमेरिकों  मारे गए। यह आपके सुर्खियों को भर दीया और आप की आँखों में आँसू लाया, और हम की भी।
1) नई दिल्ली की एक  महिला के  साथ गेंग रेप (बलात्कार) हुआ और अंत में मृत्यु (सच कहें तो हत्या) हो गई। आप अपनी आवाज के शीर्ष पर चिल्लाया और सड़कों पर उतर आए। हम ने  भी किया था।
2) केरल की  2 भारतीय मछुआरों को इतालवी मरीन ने मार डाला। हमारी सरकार इतालवी राजदूत को गिरफ्तार करने की हद तक चला गया। हम ने  आप का समर्थन किया।
आप रक्षाबंधन, होली और दीवाली मनाते हैं. मगर पोंगल नहीं।
आप  भले ही श्रीलंका के संबंधों (खेल या अन्यथा) के पूरा समर्थन कर रहे हैं, वे दक्षिण को खतरा होने की बावजूद और ख़ास में तमिलनाडु को।

ऐसा क्यों है कि हम हमेशा अन्य भारतीय हमवतन और  मुख्य मीडिया के साथ वही एक ही दर्द को महसूस करते है? लेकिन, क्यों हमारे दर्द  आप से हमेशा अलगाववाद(सेपेरेटिस्ट), क्षेत्रवाद(रीजनलिस्ट), व्यर्थ और भाषाई(लिंग्विस्टिक) रूप में देखा जाता है? अब अपने दिल से बताओ, यहाँ कौन पक्षपाती है? जिस का दिल पत्थर सि हो चूका है? कौन अलगाववाद के बीज बो रहा है? और कौन भाषाई आधार पर सोच रहा है?

शायद हम को लगता है की हम भारतवासी हैं और हम उसकी अनुसार काम कर रहे हैं,  और शायद आप को  लगता है कि हम भारतवासी नहीं हैं और उसके अनुसार आप की हर्कत  हैं।
हम चाहते हैं कि जितना भी हम अपनी देशभक्ति में भाग लॆथे हैं, उतना ही आप हमारे दर्द में भाग लें या साथ दें। यदि नहीं, तो जो  भी हम ने साझा सब कुछ जल्द ही सपने बन जाएगा।
याद करें कि 2001 में गुजरात की  भूकंप के लिए, तमिलनाडुवासियों की  कुल योगदान, किसी भी अन्य राज्य (जो भी आप सबसे देशभक्ति लगता है) से अधिक है। कारगिल युद्ध के बाद हमारे सेना को दान देने की समय पर भी वही हुआ।
तमिलनाडु हमारी सेना को ज्याधा सिपाही देने  के साथ ही नेताजी की आजाद हिंद फौज के लिए सम्मानजनक कैप्टन लक्ष्मी (केवल महिला रेजिमेंट के कैप्टन) दे दी है।
यह इसलिए नहीं की हम अमीर हैं या हम मजबूत हैं। मगर इसलिए की हम उतने ही देशभक्ति हैं जितने  आप हैं।
और मानवता पर हमें उतने परवाह है जितना आप को है। आप कम से कम अब से यह सब महसूस करें और समय आ गया है की आप हमारी संस्कृति और संवेदनशीलता को समझ ने की कोशीश करें।
__________________________________________________________________________
To NDTV, TimesNow, CNN-IBN, The Hindu & other so-called-mainstream media and also those friends who think banning Sri Lankan players is height of stupidity:-

176,000 Innocent civilians including small babies/children who share blood relations with us in neighboring country killed. You did your duty by writing obituaries. But, we cried.
Thousands of girls raped & mutilated in Sri Lanka. More girls raped & more girls underwent acid attack in Tamil Nadu. You either ignored it (or) gave it no importance. But, our hearts
bled.
400 Indian fishermen from Tamil Nadu killed by Sri Lankan Navy. You said that TN fishermen crossed borders. We prayed everyday for safe return.
We celebrate Raksha Bandhan, Holi, Diwali & Pongal.
We stood with you when you closed doors for Pakistan (Sports or otherwise) even though they are never a threat to the South.

3,000 Americans killed in the nation farthest from us in 2001. It grabbed your headlines & brought tears in your eyes. Ours too.
1 New Delhi girl gang-raped and eventually died (murdered I should say). You shouted at top of your voice & came to streets. We did too.
2 Indian fishermen from Kerala killed by Italian Marines. Our Government went to extent of arresting the Italian envoy with immunity. We supported you.
You celebrate Raksha Bandhan, Holi & Diwali. But not Pongal.
You go to your fullest extent in supporting Sri Lanka's relations (Sports or otherwise) even though they are a threat to the South & especially Tamil Nadu.

Why is that we always feel the same pain as other Indian compatriots & the so-called mainstream media? But, why is our pain always seen as separatism, regionalism, linguistic & senseless for you? Tell from your heart on who is biased, who is thinking on linguistic lines, who is being stone-hearted & who is trying the sow the seeds of separatism.

Maybe it is because we feel we are Indians & act accordingly and Maybe it is because you feel we are not Indians and you behave accordingly... As much as we share your patriotism, we wish you share our pain. If not, everything we share will become dreams soon. Please do remember that the total contribution from individuals in Tamil Nadu is more than that of any other State (whichever you think is most patriotic) to Gujarat earthquake in 2001. Same story with donations to military after Kargil war. Tamil Nadu gave a lot of ground soldiers as well as the respectable Captain Lakshmi (Captain of only female regiment) for Netaji's Indian National Army. Not because, we are rich or we are strong. It is because we are as patriotic as you are, if not more. And we care for humanity as much as you do, if not more. It is high time you understand that & also understand our culture & sensitivities.

#######################################################################
Originally written by Mr. Sundar Balakrishnan [https://www.facebook.com/bspillay] 

பதிவு 1 # ஏன் கடவுள் ..... ஒரு நாத்திக விளக்கம்!


அறிவியல் பூர்வமாக பார்க்கும் போது மனிதன் ஒரு மிருகம் தான், என ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். உண்மையும் அது தான். ஒரு செல் உயிரினம் முதல் உலகின் அரசன் என பறைசாற்றிக் கொள்ளும் மனிதன் வரை அனைத்தும் பரிணாம வளர்ச்சியின் செயல்பாடு தான். மனித உடல் விந்தைகளிலும் பெருவிந்தை. அண்ட சராசரங்களை ஆராய சென்ற மனிதனால் இன்னும் தனக்குள்ளேயே இருப்பவற்றை முழுவதுமாக அறிய முடியவில்லை.

மனித உடலை கூறு போட்டால் மிஞ்வது வெறும் வேதியல் பொருட்களாக, அதாவது வெறும் ரசாய‌னங்களாகத் தான் இருக்கும். எல்லா உயிரினங்களுக்கும் இது பொருந்தும், உயிர் அற்ற பொருட்களுக்கும் பொருந்தும். உடல் என்பது பல்வேறு ரசாயனங்களின் கூட்டமைப்பு. வேதியலில் மிக்சர்(mixture), காம்பௌண்ட்(compound) என இரண்டு வித கூட்டமைப்புகள் உண்டு. அணு அளவில் (atomic level) ஒன்றிணைந்த பொருட்களுக்கு (எ.கா: நீர்) காம்பௌண்ட் எனவும், அப்படி இல்லாமல் வெளி அளவில் மேலோட்டமாக கலந்து கிடக்கும்  (loosely packed in physical level) பொருட்களுக்கு (எ.கா: பால்) மிக்சர் எனவும் பெயர். மனிதன் இவை இரண்டின் கூட்டமைப்பு (mixture of compounds).
ஆனால் இந்த வேதியல் பொருட்களால் மட்டும் மனிதனை தீர்மானித்து விட முடியும் என்றால் ஒரு மனித பிணத்திற்கும் உயிர் உள்ள மனிதனுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது. எனவே வேதியலை விட்டுவிட்டு "செயல்பாடு" கோணத்தில் ஆராய்வோம்.  அதாவது முக்கிய உறுப்புகள் செயல்பட்டால் மனிதன், இல்லையென்றால் பிணம். இது குறைந்த பட்சம் அந்த முக்கிய உறுப்பு மூளை என எடுத்துக் கொண்டால், சரி என்றே தெரிகிறது. அப்போது ஒரு மனிதனின் மூளையின் செயல்பாட்டை விளக்கி விட்டால் அந்த மனிதனை விளக்கி விடலாம். மனித மூளையின் இந்த செயல்பாடுகள் பெரும்பாலும் விலங்குகளோடு ஒத்து போகின்றன. அவை மூளை உடல் உறுப்புகளை செயல்படுத்துவது தொடர்பானது. அந்த பெரும்பான்மையை நீக்கி உளவியல் பூர்வமாக பார்த்தால் தான் மனிதன் மிருகங்களிடமிருந்து வேறுபட்டு நிற்கிறான்.
பண்டைய கிரேக்கர்கள் உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும் விளக்கம் தர முயன்றனர். கடைசியாக மனிதனுக்கு விளக்கம் தரும் நேரம் வந்தது. ஒரு அறிஞர் சொன்னார் "மனிதன் ஒரு இரண்டு கால் உயிரினம்". உடன் இருந்த ஒருவர் ஒரு புறாவை காட்டினார். வேறு ஒரு அறிஞர் சொன்னார் "மனிதன் ஒரு இரண்டு கால் உயிரினம் ஆனால் அவனால் பறக்க முடியாது". உடன் இருந்தவர் பறக்க முடியாத ஒரு கொழுத்த வான் கோழியை காட்டினார். அடுத்த அறிஞர் சொன்னார் "மனிதன் இறக்கைகள் இல்லாத ஒரு இரண்டு கால் உயிரினம்". உடன் இருந்தவர் அந்த வான் கோழியின் இறக்கைகளை வெட்டி காட்டினார். மீண்டும் அறிஞர்கள் சிந்திக்க ஆரம்பித்தனர். இப்படியாக
பல விளக்கங்கள் கொடுத்தும் மறுக்கப் பட்டும் வந்தன. முடிவில் அவர்கள் தீர்மானித்தனர். "மனிதன் விளக்க முடியாத ஒரு உயிரினம். அவன் விளக்கங்களுக்கு அப்பாற் பட்டவன்". இத்தகைய விளக்கத்தை கொடுத்ததில் பெருமையும் கொண்டனர். இது ஒரு கோணத்தில் சரி தான். ஆனால் ஆதிகாலம் முதலே சிந்தனையில் சிறந்து விளங்கிய நம் இந்திய முன்னோர்கள் ஒரு மிக சிறந்த விளக்கத்தை தந்தனர். அது மனிதனின் பெயரிலேயே இருக்கிறது. ஆம் "மனம்" உள்ளவர் மனிதர். "மன" என்ற சொல்லில் இருந்து தான் "மனித" எனும் சொல் வந்தது. வடமொழியில் "மனஸ் இதி மனுஷ்யஹா" என சொல்வர். ஆங்கிலத்தில் உள்ள "மேன்" (man) என்ற சொல் முதல் பெரும்பாலான‌ மொழிகளிலும் "மன" எனும் மூல சொல் கொண்டே மனிதன் வழங்கப் படுகிறான். [*இதில் "மனிதன்" என்பது ஒரு ஆண்பால் சொல் அல்ல. இது பெண்களையும் குறிக்கும். இது மட்டும் அல்லாமல், இந்த தொடர் பதிவில், எந்த இடத்தில் "மனிதன்" என்றோ, "இறைவன்" என்றோ, இல்லை வேறு எதாவது சொல்லிலோ, பொதுப்படையாக குறித்தால், அது எழுத்து வசதிக்காகவோ, எனது சோம்பேறித் தனத்தினாலோ, கவன குறைவினாலோ இருக்கலாமே தவிற அது ஆணை மட்டுமே குறிக்காது. மனித குலத்தில் பாதியான பெண்க‌ளை புறந்தள்ளி விட்டு மனிதனை விளக்கிவிட முடியாது.]
இப்படியாக ஒரு மனிதனின் விளக்கமும், அவனது அளவுகோலும் அவனது மனம் தான் என பார்த்தோமா? எனவே எந்த ஒரு மனிதனுக்கும் மிக முக்கியமானது உளவியல் பூர்வமான அவனது மனம் தான் என காண்கிறோம். உற்று நோக்கினால் அரசியல் பிரசாரம் முதல் போர்கள் வரை, தாய்மை முதல் காதல் வரை, விளம்பரம் முதல் அலுவலக சம்பளம் வரை, புத்தர் முதல் ஹிட்லர் வரை மனிதன் உளவியல் பூர்வமாக மட்டுமே அணுகப்பட்டு இருக்கிறான். மனித வளத் துறையின் (HR) மாபெரும் அறிஞரான‌ மாஸ்லோவ் (Maslov) மனிதனின் தேவைகளை விளக்கும் தனது மஸ்லோவின் பிரமீடில் (Maslov’s pyramid) இப்படியாகத் தான் அணுகி இருக்கிறார். குப்பன் முதல் காந்திவரை இதில் அடக்கம். உணர வேண்டியது, மனித ஒரு வேதியல் ஜடப் பொருள் அல்ல.
எனவே ஒரு மனிதனின் நல வாழ்விற்கும், குடும்பங்களின் நலனிற்கும், நல்ல சமுதாய கட்டுமானத்திற்கும், மாபெரும் தேசங்களை நடத்தவும் தனி மனித உளவியல் பலம் அவசியம். கண்ணால் காணக் கூடியவற்றை நேரடியாக கையாளலாம். ஆனால் எந்த முறையிலும் தொட அல்லது அளவிட இயலாத உள்ளத்தை எந்த விதத்திலும் நேரடியாக நெருங்க முடியாது. அதற்கு ஒரு உளவியல் சார்பு தேவை, ஒரு உளவியல் சக்தி தேவை, ஒரு உளவியல் மருந்து தேவை. அது தான் இறைவன். புரியும் படியாக சொன்னால் நாத்திகத்தால் ஒரு மரணம் எப்படி நடந்தது என விவரிக்க முடியும், ஆனால் அந்த மரணத்தால் ஒடிந்து போன இழவு வீட்டின் மனங்களுக்கு மருந்து போட முடியாது. இன்றளவும் விரக்தியில் உறைந்து போன மனதிற்கு ஆன்மீகத்தில் இருப்பது போல எளிமையான, பெரும் செலவில்லாத, சக்திவாய்ந்த தீர்வு நாத்திகத்தில் இல்லை. இவ்வாறு இறை தத்துவம் மனிதனுக்கு ஒரு அத்தியாவசிய தேவை ஆகிறது. உண்மையோ பொய்யோ கடவுள் தேவை என ஒரு நாத்திக விளக்கமாக இங்கு பார்த்தோம். இனி ஆத்திகத்தையும் பார்ப்போம். 
                                                 -குழலவன்

Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்

You might also like my other blog. Click here to get there.| எனது இன்னொரு வலைப்பதிவைக் காண இங்கே ஃகிளிக் செய்யவும்

Tuesday, September 18, 2012

இடிந்த கரையும்! ஒடிந்த குரலும்!

சில காலம் முன்பு அணு உலையை தீவிரமாக எதிர்த்தவன் நான். கூடங்குளம் அருகே உள்ள ராதாபுரம் எனது தோழனின் சொந்த ஊர். ஆனால் இடிந்த கரையில் செய்வது போல ராதாபுரத்தில் எந்த போராட்டமும் நடக்கவில்லை என அவர் சொன்னது எனக்கு பெரும் வியப்பைத் தந்தது. இடிந்த கரையைத் தவிற கூடங்குளத்தை சுற்றி உள்ள மற்ற கிராமங்கள் அணு உலையை ஆதரிப்பதாக அவர் மேலும் சொன்னது என்னை திகைப்புற வைத்தது. ஆனால் அணு உலைக்கு ஆதரவு தந்தவர்களின் குரல்கள் ஏன் யாருக்கும் கேட்கவில்லை? யோசித்துப் பார்த்தால் விடை மட்டும் அல்ல ஒரு கவிதையும் வந்தது.





இடிந்த கரையும்! ஒடிந்த குரலும்!

அணுக்கழிவை எதிர்த்து நான் உங்கள்
   அரசியல் கழிவு ஆகிட‌ மாட்டேன்!

இடிந்தகரையை காணும் கண்கள் ‍ எங்கள்
   ஒடிந்த வாழ்வை காண்பது இல்லை
துடுப்பு பிடித்தே வாழும் மக்களின்
  துடிப்பை தூண்டி ஏமாற்றி விட்டனர்

ராட்சத காமிரா கொண்டு வருவோர்க்கு
  ராதாபுரத்தின் நிலை என்ன தெரியும்?
படித்த விஞ்ஞானி சொல்வது தவறென‌
   வடித்த பொய்யை இங்கு ஏற்கவில்லை

அடுப்புக்கும் வழியில்லை, எம் பிள்ளை
  படிப்புக்கும் வழியில்லை; அரசியல் நடிப்புக்கு
இடிந்தகரை வீழ்ந்ததனால் காண்பார் உண்டு,
  வீழாத ராதாபுரத்தை யார் காண்பாரோ?


                                                                   -குழலவன்

Sunday, September 16, 2012

உலையை உருட்டாதே

இடிந்த கூரையை அடுத்த உலையை
   மீசை பூனை கவிழ்க்குமோ?

அலையைக் காட்டி உலையை அணைக்கும்
   காலம் என்று மாறுமோ?

ஏழை வயிறு பெற்ற மக்களின்
   அறியாமை என்று விலகுமோ?

ஏழைகள் அண்டும் உலையை உருட்டி
   உண்போர் உணவு செரிக்குமோ?

நான் பூனையைக் கண்டு நோவதா?
    இல்லை உலையை கட்டிக் கொள்வதா?
அறியா மக்களை பெற்று எடுத்தவள்
    உலை கஞ்சியையும் துறப்பதா?

                ‍                        -குழலவன்

போராளி !!

ஊரை அடித்து
  உலையில் போட்டவன் ...
     காவாலி!!

உலையை அடித்து
 ஊருள் போட்டவன் ...
   போராளி !!


முதலாவது அடுப்பு உலை!
இரண்டாவது அணு உலை!

                      -குழலவன்

Wednesday, May 2, 2012

கரம்இணைவோம் ! குரல்கொடுப்போம்!

தோத்திரம் சொல்லும் தோழர்களும் ‍‍- நல்
தொழுகை செய் சகோதரரும்
நாரணன் சிவன்தொழு ஞானியரும்
ஜன்லோக்பால் கேட்டிட கரம்இணைவோம்

வாழிய பாரத தேசமென்றும் - ‍புகழ்
ஓங்கிடும் நாளும் பாரில் வரும்
ஊழல் லஞ்ஜம் துன்பமெல்லாம்
ஜன்லோக்பால் வந்திட ஓடிவிடும்

முக‌சிரிப்பின் சுறுக்கங்கள் விரிவடைய‌ - பாழ்
கருப்புப் பணமோ கசங்கிவிட‌
ஏழைகள் வாழ்வு எழுச்சிபெற‌
ஜன்லோக்பால் கேட்டே குரல்கொடுப்போம்

                                                             - குழலவன்

இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும் | Click here to follow this blog