Thursday, April 21, 2011

ஜன் லோக்பால் சட்டம்!

சட்டம் வந்தது! சட்டம் வந்தது!
சத்தம் செய்ததும் சட்டம் வந்தது!
திட்டம் வந்ததும் நட்டம் செய்திடும்
ஊழல் பேயினை மட்டம் செய்தது!

சட்டம் செய்திட சபைக்கு வந்தவன்
கொட்டம் செய்தல் மட்டும் செய்தான்!
திட்டம் தவிடாய் செய்து - அவனவன்
மட்டும் வாழ்வதில் பட்டமே பெற்றான்!

குட்டக் குட்டக் குனிந்த குப்பன்
சீற்றம் கொண்டு சீறிய பின்னர்,
சட்டம் வந்தது! சட்டம் வந்தது!
கொட்டம் போட்டதை மட்டம் செய்தது!

பட்டம் பெற்றவன், பாமரன், கிழவன்,
முற்றும் துறந்த முனிவன், வணிகன்,
மாணவன், சேவகன், நடிகன் எனபலர்
சத்தம் செய்ததும் சட்டம் வந்தது!

துக்கம் களைந்திட சட்டம் வந்தது!
தூக்கம் கலைந்ததும் சட்டம் வந்தது!
ஊழல் போக்கிட சட்டம் வந்தது!
சத்திய கிரகம் சட்டம் தந்தது!

சட்டம் வந்தது சட்டம் வந்தது!
"ஜன் லோக் பால்" சட்டம் வந்தது!
சுத்தம் செய்தது! சுத்தம் செய்தது!
ஊழலை ஒழித்து சுத்தம் செய்தது!
-குழலவன்


Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்