முண்டி அடித்து, நெற்றி வியர்த்து,
கண்ட இடமெல்லாம் கால் தேயத் தேடி ...
இண்டு இடுக்கிலும், அகன்ற பரப்பிலும்,
குண்டு குழியிலும், நண்டு வளையிலும் தேடி ....
மொண்டு எடுத்த அரை குவளை நீரால்
தொண்டை நனைக்காமலே கூறினான் தமிழக விவசாயி
"அப்பாடா இந்த தண்ணீரை வைத்து வயிற்றில் கட்டும்
ஈரத் துணியையாவது நனைக்கலாம்"!!
-குழலவன்
இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும் | Click here to follow this blog
