Wednesday, May 2, 2012

கரம்இணைவோம் ! குரல்கொடுப்போம்!

தோத்திரம் சொல்லும் தோழர்களும் ‍‍- நல்
தொழுகை செய் சகோதரரும்
நாரணன் சிவன்தொழு ஞானியரும்
ஜன்லோக்பால் கேட்டிட கரம்இணைவோம்

வாழிய பாரத தேசமென்றும் - ‍புகழ்
ஓங்கிடும் நாளும் பாரில் வரும்
ஊழல் லஞ்ஜம் துன்பமெல்லாம்
ஜன்லோக்பால் வந்திட ஓடிவிடும்

முக‌சிரிப்பின் சுறுக்கங்கள் விரிவடைய‌ - பாழ்
கருப்புப் பணமோ கசங்கிவிட‌
ஏழைகள் வாழ்வு எழுச்சிபெற‌
ஜன்லோக்பால் கேட்டே குரல்கொடுப்போம்

                                                             - குழலவன்

இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும் | Click here to follow this blog

No comments:

Post a Comment