சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டின் ஒர்அங்கமாய் விளங்குவதே நூலகம்.
இங்கு இதனை மாற்றல், கற்றலுக்கே
பங்கமாய் விளைந்து விடாதோ?
ஏடு எதிர் ஏறி, மழலை மாணிக்கவாசகன்
பாடியதே சரியென சாட்சி சொன்னதோர் காலம்.
இன்று மழலையையே காரணம் காட்டி
-குழலவன்
குழந்தைகள் நல மருத்துவமனை கட்ட அண்ணா நுற்றாண்டு நூலகம் எழும்பூருக்கு மாற்றப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
அண்ணா நுற்றாண்டு நூலகம் அரியதோர் புது அறிவியல் கோவில்.
அறிவியல் மட்டுமன்றி இங்கே அறவியலும் மேலும் பல துறையியலும் அறியலாம், பயிலலாம். தென் ஆசியாவின் மாபெரும் புத்தகப் பெட்டகத்தை சட்டென மாற்றி விடுவது சரியாய் இருக்காது.
சென்னையின் மிகச்சிறந்த கல்விக்கூடங்களை தனது அருகாமையில் கொண்டுள்ளதால் இந்த நூலகத்தினால் பயனடைவோர் ஏராளம். கல்விக்கூடங்கள் மட்டுமல்லாமல் இதன் அருகாமையில் பல ஆய்வுக்கூடங்களும் உண்டு. தென் இந்தியாவின் தலைசிறந்த கல்லூரியான ஐ.ஐ.டி.யும், தமிழ் நாட்டின் தலை சிறந்த பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகமும் இதன் வெகு அருகாமையில் உள்ளன. பல்வேறு மாணவர்கள் கூடும் இது போன்ற இடத்தில் இல்லாமல் வேறு எங்கு இருக்கத் தகும் இத்தகைய தலை சிறந்த நூலகம்.
இதன் அருகாமையில் இருக்கும் வேறு பல கல்விக் கூடங்களாவன பின்வருமாறு: ஐ. ஐ. டி. , அழகப்பா பல்கலைக்கழகம், Madras School of economics, MAC nursing college, CLRI, NIFT, வனவாணி, IIT வளாகத்தில் உள்ள மற்ற பல பள்ளிக் கூடங்கள், Central poytechnic, IGNOU regional center, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கூடம், Asian college of journalism, Film Institute, Dr. Dharmambal polytechnic college for women, MS Swaminathan research foundation, Adyar cancer research institute ( அதில் ஒரு ஆய்வுக்கூடமும் அடங்கும்), Great lakes institute of management, School of architecture and planning, kendriya vidhyalaya, unity public school மற்றும் பல......
மேலும் இது கணிணி மயமாக்கப்பட்ட ஒரு நூலகம். இங்கு ஒரு மின்னணு நூலக வசதிகளும் உள்ளது. அதாவது இங்கே "லேப்டாப்"களும் கணிணி கருவிகளும், வலை நூல்களும் பயன் படுத்தலாம், படிக்கலாம். இத்தகைய, எங்குமிராத வசதிகளை ஒருங்கே கொண்ட ஒரு நூலகத்தை தகுந்த காரணங்கள் இல்லாமல் வேறு இடத்திற்கு மாற்றுவது வேண்டா வெறுப்பிற்கு வழி வகுப்பதாய் அமைகிறது.
எழும்பூரில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. மேலும் அப்படி ஒரு மருத்துவமனை அமைப்பது வரவேற்கத்தக்கது தான் என்றாலும், இந்த நூலகத்தை இடம் பெயர்துத்தான் இதைச் செய்ய வேண்டும் என்று திட்டமிடுவது, தேவை இல்லாதது. ஏற்கனவே, கடந்த சில காலமாய் கோட்டூர்புரம் சாலையில் அடிக்கடி சாலை நெரிசல் ஏற்படுகிறது. நானும் அண்ணா பல்கலக்கழகத்தில் படிக்கையில் இங்கு பெரிதும் அவஸ்த்தை பட்டிருக்கிறேன். இங்கே தேங்கும் நெரிசல் செனோடாப் சாலை முதல் சர்தார் படேல் சாலை வரை போக்குவரத்தை தேக்கி வைக்கிறது. இந்த நிலையில் இந்த சாலையில் மருத்துவமனைக்கு வருபவர்கள் வரிசை கட்டி நெரிசல் தந்தால், பயணிகள் செல்லுமிடம் போய்ச்சேர்ந்தர்ப் போலதான்.
எழும்பூரிலேயே குழந்தை மருத்துவமனையை விரிவாக்கம் செய்தல் மிகச்சிறந்த வழி. முந்தய அரசு செய்த சில நல்ல திட்டங்களையும், அவர்களுக்கு பெயர் வரும் என்பதற்காக மாற்றினால் மக்களிடம்தான் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். எதிரிக்கட்சியின் எதிர்க் கட்சியை இருப்பதைக் காட்டிலும் மக்களின் மனதை ஆளும் காட்சியாய் இருப்பதே புத்திசளித்தமன் அல்லவா? ராசாங்கம் யோசித்தால் நல்லது.
- குலலவன்
Click here to follow this blog | இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்
No comments:
Post a Comment